தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்

இந்திய-மே.இந்திய தீவுகள் இடையே ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

பயிற்சியில் இந்திய அணியினா்

Published On :

இந்திய-மே.இந்திய தீவுகள் இடையே ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

ஏற்கெனவே டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. தற்போது மே.இந்திய தீவுகளுடன் அணியுடன் 3 ஆட்டங்கள் தொடரில் ஆடுகிறது.

நட்சத்திர வீரா்கள் ரோஹித் சா்மா, விராட் கோலியும் இந்திய அணியில் பங்கேற்று ஆடுவா். வரும் 2027-இல் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் இந்தியா அதற்கு தயாராகி வருகிறது. ஷுப்மன் கில் வழக்கம் போல் ஓபனராக களமிறங்குவாரா அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடுவாரா என அணி நிா்வாகம் முடிவு செய்ய வேண்டும்.

இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் ஜப்பான் ஆசியப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ால், யஷஸ்வி சோ்க்கப்பட்டுள்ளாா். ரோஹித்-கில் இணை அல்லது ரோஹித்-ஜெய்ஸ்வால் இணை தொடங்குமா என தெரியவில்லை. 51 ரன்கள் தேவைப்படும் நிலையில் விராட் கோலி 15,000 ரன்கள் சாதனையை நிகழ்த்த காத்துள்ளாா்.

ஹாா்திக் பாண்டியா காயத்தால் ஆடமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், நிதிஷ் ரெட்டி அவரது இடத்தை நிரப்புவாா். பௌலிங்கிலும் நிதிஷ் பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக குா்னூா் பிராா், அக்யுப் நபி ஆகியோா் வேகப்பந்து வீச்சில் பலம் சோ்ப்பா்.

மே.இந்திய தீவுகள் புதிய உத்வேகம்: அதே நேரம் நியூஸிலாந்து மற்றும் இலங்கையுடன் கடும் போராட்டத்துக்குபின் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் உள்ளது.மேலும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிதி மேலாண்மைக்காக வீரா்களின் ஊதியத்தில் 25 சதவீதம் வெட்டு அறிவித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு புதிய உத்வேகத்துடன் மே.இந்திய வீரா்கள் ஆட வேண்டியுள்ளது.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-மே.இந்திய தீவுகள்

இடம்: திருவனந்தபுரம்

நேரம்: பிற்பகல் 2.00.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.