ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஃபிஃபா 2018: எகிப்துக்கு எதிராக உருகுவே வெற்றி

முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள உருகுவே அணி தற்போது முதன்முறையாக வென்றுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2018, 3:25 pm

'உலகக் கோப்பை கால்பந்து 2018' 2-ஆம் நாள் லீக் ஆட்டத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கிய முதல் போட்டியில் எகிப்து, உருகுவே அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் துல்லியமாகத் தடுக்கப்பட்டன.

இந்நிலையில், போட்டியின் முடிவில் சரியாக 89-ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் ஜோஸ் மரியா ஜமினெஸ், ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. மேலும் கடந்த 1970 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தங்களின் முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள உருகுவே அணி தற்போது முதன்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.