ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர்கள்: முழுப்பட்டியல்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சாம் கரண்...


நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர் சாம் கரண் அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் ஆடிய பஞ்சாப் 166/9 ரன்களை குவித்த நிலையில், பின்னர் ஆடிய தில்லி அணி 152 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சாம் கரண். கடந்த வருட ஐபிஎல்-லில் எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹாட்ரிக் எடுக்கவில்லை. இந்நிலையில் இரு வருடங்கள் கழித்து ஐபிஎல்-லில் ஒரு பந்துவீச்சாளர் ஹாட்ரிக் எடுத்துள்ளார்.
மேலும் 20 வருடம் 302 நாளில் ஹாட்ரிக் எடுத்து ஐபிஎல் போட்டியில் இளம் வயதில் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சாம் கரண். இதற்கு முன்பு, 2009-ல் ரோஹித் சர்மா 22 வருடம் 6 நாளில் ஹாட்ரிக் எடுத்து சாதனை செய்தார். அதை சாம் கரண் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ரூ. 7.20 கோடிக்கு சாம் கரணை பஞ்சாப் அணி தேர்வு செய்தது.
ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த வீரர்களின் பட்டியல்
2008 - பாலாஜி, மிஸ்ரா, எண்டினி
2009 - யுவ்ராஜ், ரோஹித் சர்மா, யுவ்ராஜ்
2010 - பிரவீன் குமார்
2011 - மிஸ்ரா
2012 - சண்டிலா
2013 - நரைன், மிஸ்ரா
2014 - டாம்பே, வாட்சன்
2016 - அக்ஷர் படேல்
2017 - பட்ரீ, டை, உனாட்கட்
2019 - சாம் கரண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...