சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த புதிய வீரர்
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்திறங்கியுள்ளார் குக்ஜெலெஜின்...


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நியூஸிலாந்து வீரர் ஸ்காட் குக்ஜெலெஜினைப் புதிதாகத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி என்ஜிடி-க்குப் பதிலாக அவர் தேர்வானார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்திறங்கியுள்ளார் குக்ஜெலெஜின். இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 6 அன்று பஞ்சாப்புக்கு எதிராகவும் ஏப்ரல் 9 அன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள ஆட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஸ்காட், இதுவரை நியூஸிலாந்து அணிக்காக 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...