புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!
ஹைதராபாத், பஞ்சாப், சென்னை ஆகிய மூன்று அணிகளும் 4 ஆட்டங்களில் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன.


தில்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முதலில் ஆடிய தில்லி 129/8 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 131/5 ரன்களை எடுத்தது. பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. ஹைதராபாத், பஞ்சாப், சென்னை ஆகிய மூன்று அணிகளும் 4 ஆட்டங்களில் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன. எனினும் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் சென்னை அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| ஹைதராபாத் | 4 | 3 | 1 | 6 | +1.780 |
| பஞ்சாப் | 4 | 3 | 1 | 6 | +0.164 |
| சென்னை | 4 | 3 | 1 | 6 | -0.084 |
| கொல்கத்தா | 3 | 2 | 1 | 4 | +0.555 |
| தில்லி | 5 | 2 | 3 | 4 | +0.029 |
| மும்பை | 4 | 2 | 2 | 4 | -0.087 |
| ராஜஸ்தான் | 4 | 1 | 3 | 2 | -0.333 |
| பெங்களூர் | 4 | 0 | 4 | 0 | -1.901 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...