வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

12 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி தரும் மும்பை இந்தியன்ஸ்!

மும்பை அணியின் தொடர் வெற்றிகளால் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுக்கும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

News image
Updated On :19 ஏப்ரல் 2019, 6:27 am

எழில்

தில்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி அபாரமாக ஆடி 40 ரன்களுடன் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை 168/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தில்லி 128/9 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 3 ஆட்டங்களில் இரண்டில் தோற்றது மும்பை. அதன்பிறகு தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்ற பிறகு ராஜஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. மீதமுள்ள 5 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் உறுதியாகிவிடும். இதனால் மும்பை அணி வரும் ஆட்டங்களில் வென்று முதல் இரு இடங்களைப் பிடிக்கப் போராடும் எனத் தெரிகிறது. 

நீண்ட நாள்களாக நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருந்தது சென்னை. ஆனால், ஹைதராபாத்துக்கு எதிராகத் தோற்றதால் தற்போது அந்த இடைவெளி இரண்டாகக் குறைந்துவிட்டது. வரும் ஞாயிறன்று பெங்களூரில் ஆர்சிபி அணியைச் சந்திக்கிறது சிஎஸ்கே. 

மேலும் மும்பை அணியின் தொடர் வெற்றிகளால் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுக்கும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் 5 மற்றும் 6-ம் இடங்களில் உள்ளன. இதனால் அடுத்த ஒரு வாரம் இந்த அணிகள் கடுமையான போட்டி மனப்பான்மையுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.