ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரு ஐபிஎல் போட்டியில் 50 சிக்ஸர்கள்: கெய்லுக்கு ஈடாகச் சாதனை செய்த ரஸ்ஸல்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கேகேஆர் அணியின் ரஸ்ஸல்...

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 6:59 am

எழில்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கேகேஆர் அணியின் ரஸ்ஸல்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை. முதலில் ஆடிய கொல்கத்தா 232/2 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 198/7 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 232 ரன்களை குவித்தது கொல்கத்தா. கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தனர் கொல்கத்தா அணியினர். 8 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார் ரஸ்ஸல். கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி. 9 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசினார் ஹார்திக் பாண்டியா. 17 பந்துகளில் துரிதமாக 50 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல்-லில் அதிவேக அரை சதத்தைப் பதிவு செய்தார் பாண்டியா.

ரஸ்ஸல், பாண்டியா என இருவருமே சிக்ஸர் மழை பொழிந்து கொல்கத்தா ரசிகர்களை மகிழ்வூட்டினார்கள். எனினும் ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற்று பிளேஆஃப்-புக்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை 50 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார் ரஸ்ஸல். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு வருடத்தில் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெயில் மட்டுமே இரு வருடங்கள் தலா 50 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

ஐபிஎல் போட்டி: 50 சிக்ஸர்கள்

கிறிஸ் கெயில் - 2012 - 59 சிக்ஸர்கள்
கிறிஸ் கெயில் - 2013 - 51 சிக்ஸர்கள்
ரஸ்ஸல் - 2019 - 50 சிக்ஸர்கள்

ரஸ்ஸலின் அதிரடி ஆட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.