ஐபிஎல் போட்டியில் அசத்தும் ஹோல்டரை மே.இ. தீவுகள் டி20 அணியில் சேர்க்காதது ஏன்?: பயிற்சியாளர் பதில்
டெஸ்ட் அணியின் கேப்டனாக ஹோல்டர் இருப்பதால் அவரை டி20 அணியில் சேர்க்க வேண்டாம் என...


நவம்பர் 27 முதல் டிசம்பர் 15 வரை நியூசிலாந்தில் 3 டி20 ஆட்டங்களும் இரு டெஸ்டுகளும் விளையாடவுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இதற்கான டி20 அணிக்கு பொலார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஹோல்டருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. பொலார்டுக்கு முன்பு ஹோல்டர் தான் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக இருந்தார். அதேபோல கடந்த வருடம் டிசம்பருக்குப் பிறகு எந்தவொரு சர்வதேச டி20 ஆட்டத்திலும் ஹோல்டர் இடம்பெறவில்லை.
ஆனால் சிபிஎல், ஐபிஎல் என இரு பிரபல டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார் ஹோல்டர். அவருடைய பங்களிப்பினால் ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து மே.இ. தீவுகள் டி20 அணியில் ஹோல்டரைச் சேர்க்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
டி20 கிரிக்கெட்டில் ஹோல்டரால் எப்போது வேண்டுமானாலும் விளையாட முடியும். இதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். இது ஒரு வித்தியாசமான சுற்றுப்பயணம். முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு தான் டி20 தொடர் நிறைவடைகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக ஹோல்டர் இருப்பதால் அவரை டி20 அணியில் சேர்க்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. டெஸ்டுக்கு முன்பு நான்கு நாள் ஆட்டம் ஒன்றில் அவர் விளையாடுவார். டி20 அணிக்கு அவரை எப்போது வேண்டுமானாலும் பரிசீலனை செய்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...