மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அதிக விக்கெட்டுகள்: ரபாடா - பும்ரா இடையே கடும் போட்டி!

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தில்லி வீரர் ரபாடா. 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள பும்ரா 2-ம் இடத்தில் உள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 4:48 am

DIN

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தில்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சோ்த்தது. ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் ஆனாா்.

சாம்பியன் கோப்பையைக் கைப்பற்ற மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது தில்லி.

இந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 29 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தில்லி வீரர் ரபாடா. 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள பும்ரா 2-ம் இடத்தில் உள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க ரபாடா - பும்ரா இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.