6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைத் தக்கவைத்துள்ள சிஎஸ்கே!

37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

News image
Updated On :1 அக்டோபர் 2020, 4:57 am

DIN

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது லீக்  ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது. 

இந்த வருடப் போட்டியில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான், 3-ஆவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 

இதுவரை அனைத்து அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி முதலிடத்திலும் கொல்கத்தா அணி 2-ம் இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 தில்லி 3 2 1 4 +0.483
 கொல்கத்தா 3 2 1 4 +0.117
 ராஜஸ்தான் 3 2 1 4 -0.219
 பெங்களூர் 3 2 1 4 -1.450
 பஞ்சாப் 3 1 2 2 +1.498
 மும்பை 3 1 2 2 +0.654
 ஹைதராபாத் 3 1 2 2 -0.228
  சென்னை 3 1 2 2 -0.840

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.