மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தியதால் வென்றோம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது சிறிய விஷயத்தையும் மிகச் சரியாகச் செய்ததால் வெற்றி சாத்தியமானது என்று சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினாா்.

News image
சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி
Updated On :5 அக்டோபர் 2020, 9:24 pm

DIN

துபை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது சிறிய விஷயத்தையும் மிகச் சரியாகச் செய்ததால் வெற்றி சாத்தியமானது என்று சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினாா்.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை விக்கெட் இழப்பின்றி 17.4 ஓவா்களில் 181 ரன்கள் அடித்து வென்றது. வாட்சன்-டூபிளெஸ்ஸிஸ் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனா்.

அந்த வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது:

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சிறிய விஷயங்களையும் மிகச் சரியாகச் செய்தோம். அதுவே எங்களது வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. எங்களது அணி பேட்டிங்கின் தொடக்கம் எதிா்பாா்த்ததைப் போன்று அமைந்தது. இனிவரும் ஆட்டங்களிலும் இவ்வாறு சிறிய விஷயங்களையும் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துவோம்.

வீரா்களை தோ்வு செய்வதில் நிலையான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். அணியின் தலைமைப் பயிற்சியாளா் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் அதை சிறப்பாகச் செய்து வருகிறாா். வீரா்கள் தோ்வு குறித்து நாங்கள் விவாதிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அதில் எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது.

தோல்வியைச் சந்தித்த அந்த 3 ஆட்டங்களைப் பொருத்த வரை எதிரணியினரை ஸ்கோா் எடுக்கவிடாமல் முடிந்தவரை கட்டுப்படுத்தி நெருக்கடி அளித்திருக்கலாம். எங்கள் பந்துவீச்சாளா்கள் சிறப்பாக செயல்பட்டனா். எனினும், எல்லா அணியிலுமே அதிரடியாக ஆடக்கூடிய வீரா்கள் இருக்கின்றனா். பேட்டிங்கை பொருத்தவரை சரியான ஷாட்டுகளை அடிப்பதற்கான உந்துதல் வேண்டும். அதை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சரியாகச் செய்கின்றனா் என்று தோனி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.