காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரன்கள் எடுக்கத் தடுமாறும் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்: 10 ஓவர்கள் முடிவில் 60/2

முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

News image
ஷமி
Updated On :10 அக்டோபர் 2020, 11:01 am

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது. ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. பஞ்சாப் அணி ஆறு ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஷிவம் மவிக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஷெல்டன் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் ஜார்டன் இடம்பெற்றுள்ளார். இந்தமுறையும் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை. 

கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அற்புதமாகப் பந்துவீசினார்கள் பஞ்சாப் வீரர்கள். திரிபாதியை 4 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் ஷமி. அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் நிதிஷ் ராணா 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 4-ம் நிலை வீரராக மார்கன் களமிறங்கினார். 

முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கொல்கத்தா வீரர்களால் விரைவாக ரன்கள் குவிக்க முடியாமல் போனது. 

10-வது ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 27, மார்கன் 23 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.