சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
13-வது ஐபிஎல் சீசனின் 25-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு பேட்டிங்: கடைசி 5 ஓவர்களில் 74 ரன்கள்: கோலி அதிரடியால் 169 ரன்கள் குவித்த ஆர்சிபி
170 ரன்கள் என்ற இலக்குடன் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சென்னை இந்த முறை தொடக்கம் சரியாக அமையவில்லை.
டு பிளெஸ்ஸி 10 பந்துகளில் 8 ரன்களுக்கும், வாட்சன் 18 பந்துகளில் 14 ரன்களுக்கும் பவர் பிளே ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் பவர் பிளேவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, ராயுடுவும் ஜெகதீசனும் நிதானம் காட்டி விளையாடினர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 5-ஐக் கூடத் தொடவில்லை. 10 ஓவர் முடிவில் சென்னை அணி 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, அவ்வப்போது ஓரளவு பவுண்டரிகள் கிடைத்தன. இதனால், ரன் ரேட் ஓவருக்கு படிப்படியாக 6-ஐத் தொட்டது. அதேசமயம், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 14-ஐ நெருங்கியது.
இந்த நிலையில், 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த ஜெகதீசன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
சஹால் வீசிய அடுத்த ஓவரிலேயே தோனி 1 சிக்ஸர் மட்டுமே அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாம் கரண் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் நீண்ட நேரம் விளையாடி வந்த ராயுடு 40 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் பிராவோ (7), ஜடேஜா (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
உடானா வீசிய கடைசி ஓவரில் தீபக் சஹாரும், ஷர்துல் தாக்குரும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பெங்களூரு தரப்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், இசுரு உடானா மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...