ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.


பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஷிவம் மவிக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஷெல்டன் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் ஜார்டன் இடம்பெற்றுள்ளார். இந்தமுறையும் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.
கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அற்புதமாகப் பந்துவீசினார்கள் பஞ்சாப் வீரர்கள். திரிபாதியை 4 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் ஷமி. அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் நிதிஷ் ராணா 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 4-ம் நிலை வீரராக மார்கன் களமிறங்கினார்.
முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கொல்கத்தா வீரர்களால் விரைவாக ரன்கள் குவிக்க முடியாமல் போனது.
10-வது ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.
23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த மார்கன், பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டினார். கடகடவென சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 17 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.
நன்கு விளையாடி அரை சதமெடுத்த ஷுப்மன் கில், 47 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஸ்ஸலின் விக்கெட்டை 5 ரன்களில் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு 58 ரன்களில் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் ஸ்கோர் 160 ரன்களைத் தாண்ட பெரிதும் அவர் உதவினார்.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...