பஞ்சாப் அணியில் கெயில் மீண்டும் இல்லை: கொல்கத்தா முதலில் பேட்டிங்!
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்


பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது. ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. பஞ்சாப் அணி ஆறு ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஷிவம் மவிக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஷெல்டன் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் ஜார்டன் இடம்பெற்றுள்ளார். இந்தமுறையும் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...