காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பென் ஸ்டோக்ஸ் நாளை விளையாடுவாரா?: ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் பதில்

ஞாயிறன்று நடைபெறவுள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது குறித்து

News image
Updated On :10 அக்டோபர் 2020, 8:04 am

DIN

ஞாயிறன்று நடைபெறவுள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பெற்ற தில்லி அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. தில்லி தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி தொடர்ந்து 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்கிற கேள்விக்கு ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

அதிக அளவிலான பயிற்சிகள் இல்லாமல் உள்ளார் ஸ்டோக்ஸ். சனியன்று தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வரவுள்ளார். எனவே அதற்குப் பிறகு தான் ஞாயிறு ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்று பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூஸிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை பென் ஸ்டோக்ஸ் கவனித்து வந்தாா். இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். கடந்த வார இறுதியில் வந்த ஸ்டோக்ஸ், 6 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இன்று முதல் பயிற்சியில் அவர் இணையவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.