தவான் அரைசதம்: தில்லி 162 ரன்கள் குவிப்பு
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தில்லிக்கு இந்த முறை தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரித்வி ஷா 3-வது பந்திலேயே போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரஹானே 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து க்ருணால் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிகர் தவான் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பாட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை லேசாக உயர்த்தினர்.

இந்த இணை நடு ஓவர்களில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடி, கடைசி கட்டத்தில் பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய தருணத்தில் ஷ்ரேயஸ் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதேசமயம், தவானும் 39-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.
அதிரடி காட்ட களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள் அடித்து 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால், கடைசி கட்டத்தில் பெரிதளவு பவுண்டரிகள் கிடைக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தன.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
தவான் 52 பந்துகளில் 69 ரன்களுடனும், கேரி 9 பந்துகளில் 14 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...