மும்பை இந்தியன்ஸுக்காக 150-வது ஆட்டம்: ஜொலிக்கத் தவறிய ரோஹித்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150-வது ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) களமிறங்கிய ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஜொலிக்கத் தவறினார்.


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150-வது ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) களமிறங்கிய ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஜொலிக்கத் தவறினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக 2008-இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக களமிறங்கினார் ரோஹித் சர்மா. 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த அவர், 2013-இல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதே வருடம் மும்பை அணிக்கு முதன்முறையாக கோப்பை வென்று தந்தார் ரோஹித். இதைத் தொடர்ந்து, 2015, 2017 மற்றும் 2019 என அடுத்தடுத்து ஐபிஎல் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இன்று களமிறங்கிய ரோஹித்துக்கு ஒட்டுமொத்தமாக இது 195-வது ஆட்டமாகும். மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் இது 150-வது ஆட்டமாகும்.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸுக்காக 150-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். அண்மையில் கைரன் போலார்ட் மும்பை இந்தியன்ஸுக்காக 150-வது ஆட்டத்தில் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 பந்துகளில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...