ஐபிஎல்: ரிஷப் பந்த் ஒரு வாரம் விளையாட மாட்டார்!
காயம் காரணமாக தில்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஒரு வாரம் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


காயம் காரணமாக தில்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஒரு வாரம் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. மும்பை வீரா் குவிண்டன் டி காக் ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும் தில்லி அணி 2-ம் இடத்திலும் உள்ளன.
நேற்றைய ஆட்டத்தில் தில்லி அணியில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. இதனால் அணியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டாரா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியபோது ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் பந்துக்குப் பதிலாக ஆஸி.யைச் சேர்ந்த அலெக்ஸ் கேரி தேர்வானார். இதுபற்றி தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:
ரிஷப் பந்த் நிலைமை பற்றி சரியாகத் தெரியவில்லை. மருத்துவரிடம் பேசினேன். ரிஷப் பந்துக்கு ஒரு வாரம் ஓய்வு தேவை எனக் கூறினார். மீண்டும் அதே வலிமையுடன் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...