சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தில் 2-வது பேட்டிங் செய்த ஹைதராபாத் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது.
பெர்குசனின் மிரட்டலான பந்துவீச்சால் ஹைதராபாத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர். ஹைதராபாத்துக்கு ரஷித் கான் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை, 2-வது பந்தில் 1 ரன், 3-வது பந்தில் ரன் ஏதும் இல்லை, 4-வது பந்தில் லெக் பைஸ் மூலம் 2 ரன்கள் கிடைக்க கொல்கத்தா வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரையும் சேர்த்தால் பெர்குசன் இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...