கெயில் சிக்ஸர், அகர்வால் 2 பவுண்டரி: 2-வது சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 2-வது சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 2-வது சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 5 ரன்கள் அடித்து சமனில் முடிந்ததால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் பஞ்சாப் முதல் பேட்டிங் செய்ததால், இந்த சூப்பர் ஓவரில் மும்பை முதல் பேட்டிங் செய்தது. மும்பையில் இந்த முறை கைரன் போலார்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா களமிறங்கினர். பஞ்சாப்புக்கு ஜோர்டன் பந்துவீசினார். இதில் மும்பை அணி 11 ரன்கள் எடுத்தது.
12 ரன்கள் என்ற இலக்குடன் கிறிஸ் கெயில் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மும்பைக்கு போல்ட் பந்துவீசினார். முதல் பந்தை புல்டாசாக வீச சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் கெயில். அடுத்த பந்தை பவுன்சராக வீச 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, ஸ்டிரைக்குக்கு வந்தார் அகர்வால். 3-வது பந்தை எதிர்கொண்ட அவர் பவுண்டரி அடிக்க, கடைசி 3 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்டன.
4-வது பந்தையும் அகர்வால் பவுண்டரிக்கு விரட்ட, பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டமும் ஒருவழியாக 2 சூப்பர் ஓவர்களுடன் நிறைவுற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...