மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூப்பர் ஓவர்: ஹைதராபாத்தை 2 ரன்களுக்கு சுருட்டிய பெர்குசன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 2:33 pm

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தில் 2-வது பேட்டிங் செய்த ஹைதராபாத் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது.

ஹைதராபாத் தரப்பில் கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். கொல்கத்தா தரப்பில் லாக்கி பெர்குசன் பந்துவீசினார். முதல் பந்திலேயே வார்னர் போல்டாகி ஆட்டமிழந்தார். இதையடுத்து, அப்துல் சமத் களமிறங்கினார். அவர் முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க, அடுத்த பந்தில் போல்டானார்.

இதன் மூலம் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஹைதராபாத். கொல்கத்தா வெற்றிக்கு சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.