ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சூர்யகுமார் அரைசதம்: முதல் அணியாக 16 புள்ளிகளைப் பெற்றது மும்பை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2020, 5:36 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக், இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த இணை பெரிதளவில் அதிரடி காட்டவில்லை. இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய சிராஜ் முதல் விக்கெட்டாக டி காக்கை (18 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். கிஷனும் பவர் பிளே முடிந்தவுடன் யுஸ்வேந்திர சஹால் பந்தில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சௌரப் திவாரி 5 ரன்களுக்கும், க்ருணால் பாண்டியா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தாலும், சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகள் அடித்து பெங்களூருவுக்கு நெருக்கடியளித்து வந்தார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10-ஐத் தொடவில்லை.

கடைசி 5 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 48 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. சிராஜ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யகுமார் அரைசதத்தை எட்டினார். அதே ஓவரில் மேற்கொண்டு 2 பவுண்டரிகளையும் விரட்டி அசத்தினார் சூர்யகுமார். அடுத்த 2 ஓவர்களில் முறையே 1 பவுண்டரியும் சிக்ஸரும் கிடைக்க கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

மாரிஸ் வீசிய 19-வது ஓவரில் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அசத்தினாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். எனினும் புதிதாகக் களமிறங்கிய பொலார்ட் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

இதனால், அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை சிராஜ் வீச முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் சூர்யகுமார்.

19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.