ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

என்னிடம் சிக்ஸ் பேக் உடற்கட்டு உள்ளது: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பெருமிதம்

எந்தவொரு சூழலையும் புன்னகையுடன் எதிர்கொள் என்பார் எங்கள் கேப்டன் தோனி. அதைத்தான் நானும் செய்தேன்.

News image
Updated On :30 அக்டோபர் 2020, 6:56 am

DIN

தன்னிடம் சிக்ஸ் பேக் உடற்கட்டு உள்ளதாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு இளம் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கூறியதாவது:

ஐபிஎல் போட்டிக்கு முன்பு கரோனாவால் நான் பாதிக்கப்பட்டேன். அது எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொள்ளும் வலிமையை அளித்தது. எந்தவொரு சூழலையும் புன்னகையுடன் எதிர்கொள் என்பார் எங்கள் கேப்டன் தோனி. அதைத்தான் நானும் செய்தேன். இது கடினமாக உள்ளது. தற்போதைய நிலையை மட்டும் எண்ண வைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமலும் கடந்த காலத்திலேயே தேங்கிவிடாமலும் இருக்கிறேன்.

முதல் மூன்று ஆட்டங்களில் நான் குறைவான ரன்களே எடுத்தேன் (0,5,0). இருந்தும் என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. கடினமான சூழலில் விளையாடியதால் தான் என்னால் ரன்கள் எடுக்க முடியாமல் போனது. எப்படியும் அதிக ரன்களை விரைவில் குவிப்பேன் என நம்பிக்கை கொண்டேன். இந்த இரு அரை சதங்களும் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளன. உடற்பயிற்சி நிலையத்தில் நான் கடுமையாக உழைப்பேன். என்னிடம் சிக்ஸ் பேக் உடற்கட்டு உள்ளது என்றார். 

2019 ஐபிஎல் போட்டிக்கு முன்பு ருதுராஜை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.