சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்கேவுக்கு நற்செய்தி: பயிற்சியைத் தொடங்கினார் ருதுராஜ் கெயிக்வாட்

முதல் ஆட்டத்தில் மோசமாக விளையாடிய முரளி விஜய்க்குப் பதிலாக ருதுராஜ், சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என...

News image
படம்: @ChennaiIPL
Updated On :21 செப்டம்பர் 2020, 6:21 am

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட், அதிலிருந்து குணமாகி பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த புதிதில் இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. பிறகு ருதுராஜைத் தவிர அனைவரும் குணமானார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான வேகப்பந்துவீச்சாளர் சஹார், முதல் ஆட்டத்தில் விளையாடினார்.

இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள ருதுராஜ், ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனுமதியை பிசிசிஐயிடமிருந்து பெற்றுள்ளார். இதையடுத்து அணி வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். 

ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி நாளை விளையாடவுள்ளது. இதில் ருதுராஜ் பங்கேற்க வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை. முதல் ஆட்டத்தில் மோசமாக விளையாடிய முரளி விஜய்க்குப் பதிலாக ருதுராஜ், சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.