பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இதில் சந்தேகம் எதுவும் உள்ளதா?: மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல சச்சின் ஆதரவு

இந்த வருட ஐபிஎல் போட்டியை மும்பை அணி வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:38 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியை மும்பை அணி வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. 

இந்நிலையில் ஒரு பேட்டியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுலர் கூறியதாவது:

இந்த வருடமும் ஐபிஎல் கோப்பையை மும்பை அணிதான் வெல்லும். இதில் சந்தேகம் எதுவும் உள்ளதா? எப்போதும் நீல வண்ண உடையில் தான் நான் இருப்பேன். மும்பையும் இந்தியர்களும் ஒன்றுசேரும்போது மும்பை இந்தியன்ஸ் ஆகிவிடுகிறது. 

ஐபிஎல் போட்டியில் எல்லா அணிகளும் சரிசம அளவில் பலமாக உள்ளன. மிகவும் பரபரப்பான போட்டியாக இருக்கும். எல்லா ஆட்டங்களிலும் போட்டி மனப்பான்மையுடன் வீரர்கள் விளையாடுவார்கள். 53 நாள்கள் நடக்கும் போட்டியில் வெற்றி உணர்வுடன் உள்ள அணி சிறப்பாக விளையாடும். 

போட்டியை நல்ல முறையில் தொடங்க வேண்டும். டெஸ்ட் தொடரிலும் ஆரம்பத்தில் நன்றாக விளையாட விரும்புவோம். முதல் ஆட்டத்தில் நன்கு விளையாடினால் தொடரை நல்ல முறையில் முடிப்போம். அதேபோல் தான் ஐபிஎல் போட்டியிலும். நல்ல தொடக்கம் அணிகளுக்கு அமையவேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.