47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐபிஎல்: ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்...

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 5:23 am

DIN

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே காரணத்துக்கு ஆர்சிபி அணி கேப்டன் கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.