பாலைக் குடித்த பந்த் பாம்பாகக் கொத்துவாரா? சற்று நேரத்தில் தோனியுடன் மோதல்
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இன்னும் சற்று நேரத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறார்.


டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இன்னும் சற்று நேரத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறார்.
14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதுகின்றன. இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியை தனது ஆதர்சமாகக் கருதி வரும் ரிஷப் பந்த், இன்று அதே தோனியை ஒரு கேப்டனாக எதிர்கொள்கிறார்.
தோனிக்கு எதிராக இன்று களமிறங்கவிருந்தாலும் நேற்று வழக்கம்போல் ஆடுகளத்தில் வைத்து தோனியிடம் உரையாடியிருக்கிறார் ரிஷப் பந்த். சென்னை சூப்பர் கிங்ஸ் மூத்த வீரர்களான சுரேஷ் ரெய்னா, சேத்தேஷ்வர் புஜாரா உள்ளிட்டோருடனும் ரிஷப் பந்த் கலந்துரையாடிருக்கிறார்.
இந்த விடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி சுட்டுரைப் பக்கத்தில் சற்று முன்பு வெளியிட்டது.
தோனியிடமிருந்து விக்கெட் கீப்பிங் நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு வரும் ரிஷப் பந்த், படிக்காதவன் பாடல் வரிகள்போல் பச்சக் குழந்தைப்போல் பாலைக் குடித்துவிட்டு பாம்பாகக் கொத்தப்போகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...