ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் நிகழ்த்திய புதிய சாதனை!
ஐபிஎல் போட்டியில் 350 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.


பிரபல வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் ராஜஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஸ்டோக்ஸின் முதல் ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்தார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் 350 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஏழு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கெயில், 23 சிக்ஸர்களுடன் 288 ரன்கள் எடுத்தார்.
நேற்றைய ஆட்டத்தில் 40 ரன்களில் கெயில் ஆட்டமிழந்தார்.
கடந்த 13 ஐபிஎல் போட்டிகளாக 133 ஆட்டங்களில் விளையாடியுள்ள கெயில், 4800 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கெயில் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும் 3-வது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...