6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல்: ஹாட்ரிக் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி...

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 5:27 am

DIN

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ஆட்டநாயகன் ஆனார். தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியினால் தொடச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது சிஎஸ்கே. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 4 3 1 6 +1.142
 2. பெங்களூர் 3 3 0 6 +0.750
 3. தில்லி 4 3 1 6 +0.426
 4. மும்பை 4 2 2 4 +0.187
 5. ஹைதராபாத்  4 1 3 2 -0.228
 6. கொல்கத்தா  4 1 3 2 -0.700
 7. ராஜஸ்தான் 3 1 2 2 -0.719
 8. பஞ்சாப் 4 1 3 2 -0.824

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.