காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்: சன்ரைசர்ஸ் அணியில் வார்னரின் சாதனைகள் என்ன?

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக 2015-ம் வருடம் நியமிக்கப்பட்டார் டேவிட் வார்னர்.

News image
Updated On :1 மே 2021, 11:02 am

DIN

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர்  நீக்கப்பட்டு, கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது சன்ரைசர்ஸ் அணி. கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக 2015-ம் வருடம் நியமிக்கப்பட்டார் டேவிட் வார்னர். அந்த வருடம் சன்ரைசர்ஸ் அணி 6-ம் இடத்தையே பிடித்தது. எனினும் அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வார்னர் தலைமையில் வென்றது. 2017-ல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்ட டேவிட் வார்னர், 2018 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. அப்போது கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், அந்த வருடம் அணியை இறுதிச்சுற்று வரை கொண்டு சென்றார். 2019-ம் ஆண்டும் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்தார் வில்லியம்சன். அவருக்குக் காயம் ஏற்பட்டபோது புவனேஸ்வர் குமார் 6 ஆட்டங்களில் கேப்டனாகச் செயல்பட்டார். கடந்த வருடம் கேப்டன் பதவி மீண்டும் வார்னருக்கே வழங்கப்பட்டது. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று 3-ம் இடம் பிடித்தது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி. எனினும் இந்த வருடம் மோசமாக அமைந்துவிட்டது. கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பாதி போட்டி முடிவதற்குள் வார்னர் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சன்ரைசர்ஸ் கேப்டனாக டேவிட் வார்னர்

2015 - 6-ம் இடம்
2016 - ஐபிஎல் சாம்பியன்
2017 - 4-ம் இடம்
2020 - 3-ம் இடம்

ஐபிஎல் போட்டியில் 26 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார் கேன் வில்லியம்சன். அதில் 14 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் அடைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.