வார்னர் இல்லாமலும் ஹைதராபாத் தோல்வி
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.
டேவிட் வார்னர் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக ஜானி பேர்ஸ்டோவுடன் மணீஷ் பாண்டே களமிறக்கப்பட்டார். இந்த இணை பவர் பிளேவில் நல்ல தொடக்கத்தையே தந்தது. 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். ஆனால், பவர் பிளே முடிந்து முதல் பந்திலேயே முஸ்தபிஸூர் ரஹ்மானிடம் போல்டானார் மணீஷ். அவர் 20 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.
அவரைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவும் 30 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஹைதராபாத் அணி ரன் குவிப்பில் திணறியது.
இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 13-ஐத் தாண்டியது.
விஜய் சங்கர் 8 ரன்களுக்கும், கேப்டன் கேன் வில்லியம்சன் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய முகமது நபி வந்த வேகத்தில் அதிரடி காட்டி 5 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்துல் சமத் ஒரு சிக்ஸர் அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கெதார் ஜாதவ் 19, ரஷித் கான் 0 என ஹைதராபாத் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...