பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மைதானம் புறப்பட்டது ரோஹித் படை!

ஐபிஎல் 2-ம் பகுதியின் முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மைதானத்துக்குப் புறப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2021, 10:57 am

DIN


ஐபிஎல் 2-ம் பகுதியின் முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மைதானத்துக்குப் புறப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் சீசன் கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டது. 2-ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணி விடுதியிலிருந்து துபை மைதானத்துக்குப் புறப்பட்டது. இதன் விடியோவை அணி நிர்வாகம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.