பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2021, 5:29 pm

DIN


நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான விடியோவில் இதுபற்றி விராட் கோலி கூறியது:

"அணியினரிடம் இன்று மாலை பேசினேன். ஐபிஎல் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். ஆர்சிபி கேப்டனாக இதுவே எனது கடைசி ஐபிஎல். 

அணி நிர்வாகத்தினரிடம் மாலை பேசினேன். கொஞ்ச நாள்களாகவே இது என மனதில் இருந்து வந்தது.

பணிச் சுமையைக் குறைப்பதற்காக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தேன். 

ஆர்சிபியைத் தவிர வேறு எந்தவொரு அணியிலும் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்திவிட்டேன். கடைசி ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் வரை ஆர்சிபி வீரராகவே இருக்க விரும்புகிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.