பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விராட் கோலி பயன்படுத்திய கார் விற்பனைக்கு

புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட லம்போர்கினி கலார்டோ ஸ்பைடர் காரை ரூ. 1.35 கோடிக்கு விற்கவுள்ளது. 

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 6:44 am

DIN

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயன்படுத்திய லம்போர்கினி கார் விற்பனைக்கு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட விராட் கோலி, லம்போர்கினி காரை 2015-ல் வாங்கினார். சிறிது நாள் பயன்படுத்திவிட்டு அதை அவர் விற்றுவிட்டார். இப்போது கொச்சியைச் சேர்ந்த கார் டீலரான ராயல் டிரைவ், விராட் கோலி பயன்படுத்திய புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட லம்போர்கினி கலார்டோ ஸ்பைடர் காரை ரூ. 1.35 கோடிக்கு விற்கவுள்ளது. 

ராயல் டிரைவின் மார்க்கெட்டிங் மேனேஜர் இதுபற்றி பேட்டியளித்ததாவது:

இது 2013 மாடல் கார். சில காலம் மட்டுமே விராட் கோலி பயன்படுத்தியுள்ளார். 10,000 கி.மீ. மட்டுமே ஓடியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த கார் டீலரிடமிருந்து ஜனவரி 2021-ல் வாங்கினோம். இந்த கார் ஒரு மணி நேரத்தில் 324 கி.மீ. தூரத்தைக் கடந்துவிடும் என்றார். 

விராட் கோலி பயன்படுத்திய கார் என்பதால் அவருடைய ரசிகர்களில் யாராவது இக்காரை விரைவில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.