மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐபிஎல்: வருண் சக்ரவர்த்தியை மெச்சிய விராட் கோலி

சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 7:41 am

DIN


ஆர்சிபி அணிக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசி ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் சக்ரவர்த்தியை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். படிக்கல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 5 ரன்களிலும் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் டி வில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஷுப்மன் கில் 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். 

சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 
நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளில் அவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு பற்றி ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

வருண் சக்ரவர்த்தி நன்றாகப் பந்துவீசினார். இந்தியாவுக்காக விளையாடும்போது முக்கியமான வீரராக இருப்பார். சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைப்பது அபாரமானது. இந்தியாவுக்காக விளையாடப்போகிற வீரர் அவர். இது நல்ல விஷயம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.