இலக்கை அபாரமாக விரட்டும் அணிகள்: கொல்கத்தா - தில்லி ஆட்ட முடிவை நிர்ணயிக்குமா டாஸ்?

இன்றைய ஆட்டத்தில் எந்த அணி டாஸை வெல்கிறதோ அந்த அணி என்ன முடிவெடுக்கும் என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
இலக்கை அபாரமாக விரட்டும் அணிகள்: கொல்கத்தா - தில்லி ஆட்ட முடிவை நிர்ணயிக்குமா டாஸ்?

ஐபிஎல் 2021 போட்டியில் சில சமயம் டாஸ் முடிவு ஆட்டத்தின் முடிவை உறுதிப்படுத்துகிறது.

பெரும்பாலான அணிகள் இலக்கை நன்கு விரட்டப் பழகியுள்ளதால் அதையே தேர்வு செய்கின்றன. டாஸ் ஜெயித்தால் முதலில் பந்துவீசவே அணிகள் விரும்புகின்றன. அதுதான் அவர்களுக்குச் செளகரியமாக உள்ளது. அதிக வெற்றிகளும் அதில் கிடைக்கின்றன. 

உதாரணத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் 6 ஆட்டங்களில் இலக்கை விரட்டி அந்த 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேபோல பல அணிகளும் இலக்கை விரட்டுவதில் கில்லியாக இருந்துள்ளன.

ஐபிஎல் 2021: இலக்கை விரட்டுவதில் அதிக வெற்றிகள்

சிஎஸ்கே - 6 வெற்றிகள்/6 ஆட்டங்கள்
தில்லி - 8/9
கொல்கத்தா - 6/9
மும்பை - 4/6
ஆர்சிபி - 4/7
பஞ்சாப் - 3/5
ராஜஸ்தான் ராயல்ஸ் - 3/7
சன்ரைசர்ஸ் - 2/9

இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்ற 7 ஆட்டங்களில் இலக்கை விரட்டிய 5 அணிகள் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த வருடம் தில்லி அணியின் 5 தோல்விகளில் 4 தோல்விகள் பேட்டிங் முதலில் செய்தபோது கிடைத்தவை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் இலக்கை விரட்டிய 5 ஆட்டங்களிலும் கொல்கத்தா ஜெயித்துள்ளது. 

இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி டாஸை வெல்கிறதோ அந்த அணி என்ன முடிவெடுக்கும் என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதேசமயம் இந்த நம்பிக்கையை உடைத்து முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்றால் அது பெரிய மாற்றமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com