ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தலிபான் அரசு தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வரும் ஊடகவியலாளருமான ஃபவாத் அமான் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்புக்குத் தலிபான் தடை விதித்துள்ளது. பெண்கள் நடனமாடுவதாலும், மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பதாலும் அதை ஒளிபரப்பக் கூடாது என்று ஆப்கன் ஊடகங்களை தலிபான் எச்சரித்துள்ளது."

14-வது ஐபிஎல் சீசனின் இரண்டாம் பகுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்துடன் துபையில் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com