எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 7:04 am

DIN

ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் கார்த்திக் தியாகி. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் அட்டகாசமான வெற்றியை அடைந்தது ராஜஸ்தான் அணி. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.