கேகேஆர் அணியை வழக்கம்போல ஊதித் தள்ளுமா மும்பை?

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி 8 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.
பொலார்ட்
பொலார்ட்

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி 8 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தா அணி 8 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் மும்பை 4-ம் இடத்திலும் கொல்கத்தா 6-ம் இடத்திலும் உள்ளன.

அபுதாபியில் இன்று நடைபெறும் ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. மும்பை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற மீதமுள்ள 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளையாவது பெறவேண்டும். அதனால் இன்றைய ஆட்டத்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதிலும் வெற்றியைத் தவறவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும்.

ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோற்கடிக்க எளிதான அணியாக உள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். மும்பை - கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை மோதியதில் மும்பை 22 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் மோதிய கடைசி 13 ஆட்டங்களில் 12-ல் மும்பை வென்று கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. 

அதிலும் ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் செய்வதென்பது அல்வா போல. 982 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 46.76, ஸ்டிரைக் ரேட் - 133.06. இன்னும் 18 ரன்கள் எடுத்துவிட்டால் ஐபிஎல் போட்டியில் ஓர் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற பெருமை ரோஹித் சர்மாவுக்குக் கிடைக்கும்.

புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் கொல்கத்தாவை மும்பை அணி ஊதித்தள்ள வேண்டும். ஆனால் தங்களது கடைசி ஆட்டத்தில் மும்பை தோல்வியையும் கொல்கத்தா வெற்றியையும் அடைந்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com