டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வெற்றிகரமாக நடைபெற்ற அறுவைச் சிகிச்சை: குல்தீப் யாதவ் பகிர்ந்த புகைப்படம்

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது பற்றி...

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 12:03 pm

DIN

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது பற்றி பதிவு எழுதியுள்ளார்.

இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 65 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடினார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள 26 வயது குல்தீப் யாதவ் - கடந்த வருடம் 5 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. 2019 ஐபிஎல் முதல் மிக மோசமாகப் பந்துவீசி வருவதால் இந்திய அணியிலும் தன்னுடைய இடத்தை அவர் இழந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குல்தீப் யாதவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட அந்தக் காயம் தீவிரமாக இருந்ததால் அதற்கு மேலும் ஐபிஎல் போட்டியில் பங்குபெற முடியாத சூழல் உருவானது. இதையடுத்து சிகிச்சைக்காக குல்தீப் யாதவ் உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் காயத்துக்காக மும்பையில் அறுவைச் சிகிச்சை கொண்டார் குல்தீப் யாதவ். இதனால் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவரால் எந்தவொரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் இடம்பெற முடியாது என அறியப்படுகிறது. 

இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது பற்றி ட்விட்டரில் குல்தீப் யாதவ் கூறியதாவது:

அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. அனைவருடைய ஆதரவுக்கும் நன்றி. விரைவில் குணமாகி எனக்கு மிகவும் பிடித்த ஆடுகளத்துக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தவுள்ளேன் என்று கூறி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.