பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 4:09 pm

DIN

கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

ஐபிஎல் நடப்பு சீசனின் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால், தவான் ஆகியோர் களமிறங்கினர். 

ஆனால் மயங் அகர்வால் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து தவான் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராஜபக்ச அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். லியாம் லிவிங்ஸ்டோனும் தன்பங்கிற்கு 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 

கடைசி வரிசையில் களமிறங்கிய ரபாடா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 4, டிம் சௌதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.