சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு: பிசிசிஐயிடம் சன்ரைசர்ஸ் அணி புகார்

கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தது தொடர்பான மூன்றாம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐயிடம் சன்ரைசர்ஸ் அணி புகார் அளித்துள்ளது.

News image
ஆட்டமிழந்த கேன் வில்லியம்சன்
Updated On :2 ஏப்ரல் 2022, 10:42 am

DIN

கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தது தொடர்பான மூன்றாம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐயிடம் சன்ரைசர்ஸ் அணி புகார் அளித்துள்ளது.

மார்ச் 29 அன்று ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. 2-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் கேன் வில்லியம்சன். ஆனால் சஞ்சு சாம்சன் அந்த கேட்சைத் தவறவிட, அவர் அருகில் ஸ்லிப்பில் இருந்த படிக்கல் சட்டென்று கீழே விழ இருந்த பந்தைப் பிடித்தார்.  தொலைக்காட்சியில் கேட்சைப் பார்த்தபோது பந்து தரையில் பட்டு அதன்பிறகு படிக்கல் கேட்ச் பிடித்தது போலிருந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் ஆனந்தபத்மநாபன் அதை அவுட் என அறிவித்தார். 

இதுபற்றி சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது: தொலைக்காட்சியில் என்ன நடந்தது எனப் பார்த்த பிறகு அது அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டதை எண்ணி ஆச்சர்யமடைந்தோம். களத்தில் இருந்த நடுவர்கள் அதை மூன்றாம் நடுவருக்கு அனுப்பியதைப் புரிந்துகொள்கிறோம். அதன்பிறகு ஆதாரத்தைப் பார்த்தோம். நாங்கள் நடுவர்கள் கிடையாது. ஆனால் சரியான முடிவு என்ன என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது என்றார்.  

இந்நிலையில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தது தொடர்பாக மூன்றாம் நடுவர் மீது பிசிசிஐயிடம் சன்ரைசர்ஸ் அணி புகார் அளித்துள்ளது. விதிமுறைகளின்படி பயிற்சியாளர் முதலில் புகார் அளிக்கவேண்டும். அடுத்ததாகப் புகாரை பிசிசிஐ விசாரணை செய்யும். இதன்படி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, மூன்றாம் நடுவரின் தீர்ப்பு பற்றி புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆட்டம் முடிந்த பிறகு வழங்கப்படும் கேப்டன்களின் அறிக்கையிலும் இதுபற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.