எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மேக்ஸ்வெல் எப்போது விளையாடுவார்?: ஆர்சிபி அணி பதில்

ஏப்ரல் 6 வரை ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால்...

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 7:56 am

ஏப்ரல் 6 வரை ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அதற்குப் பிறகு ஆர்சிபி அணி விளையாடும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்த பிரபல ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். மேக்ஸ்வெல் - வினி ராமனுக்கு தமிழ் முறைப்படியும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. எனினும் ஆர்சிபி அணியின் ஆட்டங்களில் மேக்ஸ்வெல் இதுவரை விளையாடவில்லை.

இதற்கு முக்கியக் காரணம், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடியும்வரை, அதாவது ஏப்ரல் 6க்கு முன்பு வேறு எங்கும் விளையாடக் கூடாது என்பதால் தான். அவர்கள் ஆஸி. அணியில் இடம்பெறாவிட்டாலும் இதுதான் விதிமுறை. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய ஆர்சிபி அணியின் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார். ஏப்ரல் 9 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவுள்ளார். 

இதுபற்றி  ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியதாவது:

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து பார்க்கும்போது ஏப்ரல் 6-க்கு முன்பு ஒப்பந்தத்தில் உள்ள எந்த வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது. ஒருவேளை அவர்கள் முன்பே இந்தியாவுக்கு வந்துவிட்டாலும் இதுதான் நிலைமை. எல்லோரையும் போல இதைப் பற்றி எங்களுக்கும் தெரியும். எனவே அதற்கேற்றாற்போல திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் 9 முதல் எங்களுக்காக மேக்ஸ்வெல் விளையாடுவார் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.