
ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நைல் விலகியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த வருடம் மும்பை அணியிலும் அதற்கு முன்பு ஆர்சிபி, கேகேஆர், தில்லி ஆகிய அணிகளிலும் அவர் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
34 வயது நாதன் கோல்டர் நைல் இந்த வருட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் கொடுத்தார். இந்நிலையில் காயம் காரணமாக நாதன் கோல்டர் நைல் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இதையடுத்து ஆல்ரவுண்டர் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.