குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டி20 வெற்றியுடன் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைப் பாதுகாப்புடன் முடித்த ஆஸ்திரேலிய அணி

கடந்த ஒரு மாதமாக இரு அணிகளும் ரசிகர்களுக்கு அற்புதமான கிரிக்கெட் தருணங்களை வழங்கியுள்ளார்கள்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 2:05 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்ததால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆட்டம் கொண்ட டி20 தொடர் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆஸி. வீரர் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஃபிஞ்ச் 55 ரன்கள் எடுத்தார்.  

பாகிஸ்தானில் டெஸ்ட், டி20 தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றது. 

Story image

கடந்த வருட செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பிறகு, பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக இரு அணிகளும் ரசிகர்களுக்கு அற்புதமான கிரிக்கெட் தருணங்களை வழங்கியுள்ளார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பாதுகாப்புடன் நிறைவடைந்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.