மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடைசி ஓவரில் பொலார்ட் 3 சிக்ஸர்கள்: மும்பை 161 ரன்கள் விளாசல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் விளாசியுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 3:48 pm

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் விளாசியுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பையில் டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாத்வ் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தாவில் ரசிக் சலீம், பேட் கம்மின்ஸ் சேர்க்கப்பட்டனர்.

மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தைத் தந்தனர். ரோஹித் 12 பந்துகளுக்கு 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிரேவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Story image

ஆட்டத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசிய அவர் 19 பந்துகளில் 29 ரன்களுக்கு வருண் சக்ரவர்த்தி சுழலில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிஷனும் 21 பந்துகளில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ரன்கள் மட்டுமே மும்பை திணறியது.

இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஜின்க்யா ரஹானே தவறவிட, அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில் நிதானம் காட்ட, பின்னர் படிப்படியாக இருவரும் அதிரடிக்கு மாறினர். மும்பை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்க அணியின் ரன் ரேட் ஓவருக்கு 7-ஐ தாண்டத் தொடங்கியது. ஆண்ட்ரே ரஸல் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யகுமார் யாதவ் 34-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கைரன் பொலார்ட் கடைசி 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் விளாச மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்களும், பொலார்ட் 5 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.