சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

விராட் கோலிக்கு ஓய்வு தேவை: ரவி சாஸ்திரி

ஐபிஎல் போட்டியில் சுமாராக விளையாடி வரும் விராட் கோலி, சிறிது காலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும்...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

ஐபிஎல் போட்டியில் சுமாராக விளையாடி வரும் விராட் கோலி, சிறிது காலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். அதன்பிறகு சதமடிக்காமல் 100 ஆட்டங்களில் விளையாடி முடித்துவிட்டார் கோலி. 2019 நவம்பருக்குப் பிறகு 17 டெஸ்டுகள், 21 ஒருநாள், 25 டி20, 37 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய கோலியால் ஒருமுறை கூட சதமெடுக்க முடியவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. 

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலி அதிகமாக உழைத்துவிட்டார். யாருக்காவது ஓய்வு தேவையென்றால் அது அவருக்குத்தான். அது இரு மாதங்களாக இருந்தாலும் சரி, ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கு முன்போ அல்லது பின்போ எப்படியிருந்தாலும் சரி, அவருக்கு ஓய்வு அவசியம். இன்னும் ஆறு, ஏழு வருடங்களுக்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார். கோலியைச் சோர்வாக்கிவிட்டு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையைச் சீக்கிரம் முடித்துவிடக் கூடாது. இதுபோன்று தருமாறுகிற வீரர்களிடம் கருணை காட்டவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.