47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனியும்.. பாகுபலியும்..: வாசிம் ஜாஃபர் ட்வீட் வைரல்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதை பாகுபலி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ள விடியோ வைரலாகி வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2022, 1:01 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதை பாகுபலி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ள விடியோ வைரலாகி வருகிறது.

2022 ஐபிஎல் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது. ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி இன்று (வியாழக்கிழமை) விலகியுள்ளார்.

புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தவுள்ளார். எனினும், ஒரு வீரராகவே அவர் அணியில் நீடிக்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை, முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பாகுபலி திரைப்படத்தில் அரசவையிலிருந்து வெளியேறும் பாகுபலி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு அதன் விடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த விடியோ அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.