சிஎஸ்கே கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள்

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 
சிஎஸ்கே கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள்

சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

சிஎஸ்கே கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள்

சிஎஸ்கே கேப்டனாக தோனி (ஐபிஎல் & சிஎல்டி20) 

ஆட்டங்கள் - 213
வெற்றிகள் - 130
தோல்விகள் - 81
கோப்பைகள் - 6

ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளார் தோனி. 

ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையில் சிஎஸ்கே சாதித்தது என்ன?

2008 - இறுதிச்சுற்று 
2009 - அரையிறுதி
2010 - சாம்பியன்
2011 - சாம்பியன்
2012 - இறுதிச்சுற்று 
2013 - இறுதிச்சுற்று
2014 - பிளேஆஃப் 
2015 - இறுதிச்சுற்று
2018 - சாம்பியன்
2019 - இறுதிச்சுற்று
2020 - 7-ம் இடம்
2021 - சாம்பியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com